விநாயகரே... வினை தீர்ப்பவரே...!

ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை (32 அடி) திண்டுக்கல் கோபாலசமுத்திர கரையில் உள்ளது. அப்படின்னா சிறிய சிலை எங்கிருக்கிறது என்கிறீர்களா? ஒரு சிறு கைப்பிடி மண்ணை முக்கோணமாக பிடித்து வையுங்கள். அடுத்த விநாடி, ‘‘பிடிச்ச வச்ச பச்சை மண்ணில் பிள்ளையார் வந்து அமர்வார்’’ என்ற பாடல் போல, நீங்களே ஒரு சிற்பியாக மாறி விநாயகரை ரெடி செய்து விடுவீர்கள். நீங்கள் நினைக்காமலே உங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக வந்து நிற்பார் விநாயகர். எப்படி தெரியுமா? விசேஷ பட்டியலை ரெடி செய்யும்போது, முதலில் பிள்ளையார் சுழி போடுகிறீர்களே? அது அவரை நினைத்தா வந்தது?

‘‘பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு...’’ என்ற பாடல் ஞாபகம் வருகிறதா? இப்படித்தான் விநாயகர் நமது அன்றாட நிகழ்வில் ஒரு பங்கு வகிக்கிறார். அதனால்தான் கணிப்பொறி வரை காலா ஸ்டைல் வரை கணபதியை பலரூபங்களில் வடிவமைத்து, அவரது பக்தர்கள் ஒரு ‘கடவுள் சூப்பர் ஸ்டார்’ போலவே கருதுகின்றனர். வழிபாடு நேரம்: திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று சுவாதி நட்சத்திரம் சுக்லபஷம், அம்ருத யோகம் காலை  7.20 மணி முதல் 7.40க்குள் வழிபாடு செய்யலாம் அல்லது காலை 11.09 மணி முதல்  பிற்பகல் 1.35 மணிக்குள் வழிபாடு செய்ய உகந்த நேரம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: