2 புதிய கார்களை களம் இறக்கும் மிட்சுபிஷி

இந்தியாவில் மிட்சுபிஷி நிறுவனம், பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி ரக காரை மட்டுமே விற்பனை செய்து வந்தது. தற்போது அந்நிறுவனம் அவுட்லேண்டர் என்னும் ேமலும் ஒரு எஸ்யூவி ரக காரை கடந்த சில தினங்களுக்கு முன்பு விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த சூழலில், தொடர்ந்து பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. தனது எக்லிப்ஸ் எஸ்யூவி மற்றும் எக்ஸ்பேண்டர் எம்பிவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டுதான் மிட்சுபிஷி எக்லிப்ஸ் மற்றும் எக்ஸ்பேண்டர் எஸ்யூவி மாடல்கள் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டன. எக்ஸ்பேண்டர் காரானது எஸ்யூவி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட எம்பிவி கார். அதாவது, கிராஸ்ஓவர் ரக மாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிட்சுபிஷி எக்ஸ்பேண்டர் காரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய மிட்சுபிஷி எக்ஸ்பேண்டர் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். மிட்சுபிஷி எக்ஸ்லிப்ஸ் எஸ்யூவி ரக காரும் கிராஸ்ஓவர் மாடலாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நவீன டிசைன் தாத்பரியங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பானரோமிக் சன்ரூப் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களையும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

இப்புதிய மிட்சுபிஷி எக்லிப்ஸ் எஸ்யூவி ரக காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 149 பிஎச்பி பவரையும்,, 249 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் கன்ட்ரோல் மற்றும் டிரைவிங் மோடுகளும் உள்ளன. ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரக காருக்கு போட்டியாக இருக்கும். இப்புதிய மிட்சுபிஷி எக்லிப்ஸ் மற்றும் எக்ஸ்பேண்டர் மாடல்கள் நடுத்தர பட்ஜெட் பிரிவில் மிகச்சிறப்பான தேர்வாக இருக்கும். போட்டியாளர்களிடத்தில் இருந்து சற்று தனித்துவமான கிராஸ்ஓவர் ஸ்டைலில் இந்த மாடல்கள் இருப்பதும் முக்கிய அம்சம் ஆகும். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: