நல்லாசிரியர் விருது பெறுவதற்கான தகுதிகள்!

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இவ்விருது பெறத் தகுதிகள்

*ஆசிரியர்கள் பதினைந்து ஆண்டுகள், தலைமை ஆசிரியர்கள் இருபது ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

*பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டம், மாநிலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் இவ்விருதை வழங்கலாம்.

*பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் மாநில அளவில் முதலிடம் பெறுகின்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கு இவ்விருதை வழங்கலாம். 5 வருடங்களாகப் பத்து, பன்னிரண்டாம் பொதுத்தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி தரும் ஆசிரியருக்கு வழங்கலாம்.

* மாநில, இந்திய அளவில் விளையாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி, நடனம், தற்காப்புக் கலைகள், சமூகச்சேவை ஆகியவற்றில் பரிசு பெறும் மாணவர்களின் ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கலாம்.

* தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண சாரணிய இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றில் தேசிய அளவில் பங்கு பெற்று, மாநிலத்திற்குப் பெருமை தேடித் தந்த மாணவர்களின் ஆசிரியர்களுக்குத் தரலாம்.

* பகுதி நேரத்தில், எந்தவிதப் பணப் பலனும் பெறாமல், பொதுமக்களுக்கு எழுத்தறிவிக்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கலாம்.

* தமிழக அரசால் மிகச் சிறந்த அளவில் நிகழ்த்தப்படும் ICTACT என்கிற மிகச் சிறந்த கற்பித்தல் போட்டி நிகழ்வில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு இவ்விருதை வழங்கலாம்.

* கல்வி சாராது, சமூக நலனிற்காக, நாட்டு நலனிற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் “தொண்டு” மிக்க (குருதிக்கொடை, உடல்கொடை, கல்விக் களப்பணியாளர், தன்னார்வலர், சிறந்த கண்டுபிடிப்பாளர், மாற்றுக் கல்விச் சிந்தனையால் முன்னேற்றம் தந்தவர்) ஆசிரியருக்குத் தரலாம்.

* முக்கியமான போட்டிகளில் சிறந்த இடம் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆசிரியர்களுக்குத் தரவேண்டும்.

இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலையாகவும், வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும்.இவ்விருதின் ஒரு பகுதியாக வகுப்பறையில் கற்றல், கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் மற்றும் புதுமையான கற்றல், கற்பித்தல் முறைகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருதுகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக வழங்கப்பட்டுவருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு நல்லாசிரியர் பட்டியலை உருவாக்கி ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. இறுதியாக விருதுக்குரியவர்களை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்கிறது. இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆசிரியர் நாளான செப்டம்பர் 5ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், குடியரசுத் தலைவர், விருதுகளை வழங்குவார்.ஒன்றிய அரசின் ‘நல்லாசிரியர் விருது’ பெறுவோருக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் விருந்து தந்து பெருமைப்படுத்துகின்றனர். அவர்

களுக்கு, வாழ்நாள் முழுவதும் தொடர்வண்டியில் இலவசமாகப் பயணிக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ என்னும் பெயரில் வழங்கிவருகிறது.

தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது!

ஆசிரியர் தினமான வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களிலுமிருந்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு தேசிய அளவில் 350 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 45 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒருவருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஸதிக்கு மட்டுமே இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் சில்வர் மெடல் ஆகியவை ஆசிரியை ஸதிக்கு வழங்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: