தமிழில் வெளியாகும் ஹாலிவுட் திகில் படம்

சென்னை: தி போப் எக்ஸார்ஸிஸ்ட் ஹாலிவுட் திகில் படம் தமிழிலும் வரும் ஏப்ரல் 7ம் தேதி ரிலீசாகிறது. ஆவியால் பீடிக்கப்பட்ட ஒரு சிறுவனைக் காப்பாற்றும் பொறுப்பு பாதிரியார் கேப்ரியலிடம் வருகிறது. திகிலூட்டும் அந்த வழக்கு, பல நூற்றாண்டுகளாக வாடிகன் பேராலயத்தால் மறைக்கப்பட்டு வரும் ரகசியத்திற்கு இட்டுச் செல்கிறது. வலுவான மத நம்பிக்கை கொண்டவரும், தொழில்முறை பேயோட்டியுமான கேப்ரியல், வாட்டிகனின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடக்கும் ரகசியத்தின் பின்னால் உள்ள உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார்.  

கதையின் ஓட்டத்தில், பல ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான விஷயங்கள் தோன்றுவதோடு மட்டுமல்லாமல், திகிலூட்டும் காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் என்கிறார் இயக்குனர் ஜூலியஸ் அவெரி. பாதிரியாராக ஆஸ்கர் விருது வென்ற ரசல் க்ரோவ் நடித்திருக்கிறார். மேலும் டேனியல் ஜவாட்டோ, அலெக்ஸ் எஸாய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். காலித் மொஹதசெப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெட் கெர்சல் இசையமைத்துள்ளார். சோனி பிக்சர்ஸ் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்கிறது.

Related Stories: