பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால்

சென்னை: பசங்க, மெரினா, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, கதகளி, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் கடைசியாக கடந்த ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கினார். சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்போது விஷால் இயக்கத்தில் புதிய படம் இயக்க உள்ளார். இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். ஏற்கனவே விஷால் நடிப்பில் கதகளி என்ற படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.  இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து புதிய படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படத்துக்கு ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. அதேபோல் மற்ற டெக்னீஷியன்களுக்கான தேர்வும் நடந்து வருகிறது.

Related Stories: