சவாலை சந்திப்பவர்களால்தான் சாதிக்க முடியும்: சிவகார்த்திகேயன் பேச்சு

சென்னை: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘1947 ஆகஸ்ட் 16’. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில், ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் கவுதம் கார்த்திக், புகழ், புதுமுகம் ரேவதி நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘7ஆம் அறிவு’ ஆடியோ வெளியீட்டு விழாவில், சத்யம் தியேட்டரில் பின்னால் இருந்து பணியாற்றினேன். பிறகு அவர் தயாரித்த  ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கினேன். பிறகு அவர் தயாரித்த  ‘மான் கராத்தே’ படத்தில் ஹீரோவாக நடித்தேன். இப்போது அவர் தயாரிக்கும் பட  விழாவுக்கு சிறப்பு விருந்தினராக, இதே சத்யம் தியேட்டர் மேடையில் உட்கார்ந்துள்ளேன். ஒருவர் வளர்ந்தால்  சந்தோஷப்படுபவர்கள் நிறையபேர் இருப்பார்கள். ஆனால், எப்படியாவது என்கூட இருப்பவர்  வளர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மிகவும் குறைவு. ‘வீரம்’ படத்தில் அஜித் குமார் சொல்லும் டயலாக், ‘கூட இருக்கிறவனை நாம பார்த்துக்கிட்டா, மேல இருக்கிறவன் நம்மளை  பார்த்துக்குவான்’. ஏ.ஆர்.முருகதாஸ் தனது உதவி இயக்குனர்களின் கதையை தேர்வு செய்து தயாரிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘1947 ஆகஸ்ட் 16’ படம், நமது நாட்டின் சுதந்திரம் பற்றிய கதை. சுதந்திரத்துக்காக நிறையபேர்  கஷ்டப்பட்டுள்ளனர். அதைத்தாண்டி ஒரு வலி நிறைந்த விஷயத்தை இப்படத்தில் இயக்குனர் சொல்லியிருக்கிறார். முதல் படத்தையே வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக  தேர்வு செய்துள்ள இயக்குனர், எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கிறார். சவாலை  சந்திக்க ரெடியாக இருக்கிறார் என்றால், அவர் சாதிக்கவும் தயாராக இருக்கிறார்  என்று அர்த்தம். கார்த்திக் நடிப்பு தனித்துவமாக இருக்கும். அதுபோல், அவரது மகன் கவுதம் கார்த்திக்கின் நடிப்பும் தனித்துவமானது. திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை மாறும். திருமணம்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களைக்  கொண்டு வரும்.

Related Stories: