ஐதராபாத்: நானி நடித்துள்ள தசரா படத்துக்கு 36 கட் கொடுத்திருக்கிறது சென்சார் போர்டு. ஜெர்சி, அன்டே சுந்தரனிகி, ஷியாம் சிங்க ராய் படங்களின் தொடர் வெற்றிகளுக்கு பிறகு புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறார் நானி. தனது திறமையான நடிப்பாற்றலால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்திருக்கும் பான் இந்தியா படமான தசரா வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காந்த் ஒடேலா இயக்கியுள்ளார்.