சினிமாவும், ஓடிடியும் இரண்டு கண்கள்: எஸ்.ஜே.சூர்யா பேட்டி

சென்னை, நவ.24: அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் - தி வோர்டெக்ஸ்’ என்ற தமிழ் வெப்தொடரை தொடர்ந்து இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தம்பதியின் வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள வெப்தொடர், ‘வதந்தி - ஃபேபிள் ஆஃப் வெலோனி’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோருடன் வெலோனி கேரக்டரில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.

சரவணன் ஒளிப்பதிவு செய்ய, சைமன் கே.கிங் இசை அமைத்துள்ளார். வரும் டிசம்பர் 2ம் தேதி 30க்கும் மேற்பட்ட மொழிகளில், 240 நாடுகளில் வெளியாகும் 8 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் சம்பந்தமாக எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி: சினிமாவும், ஓடிடி தளமும் இரண்டு கண்கள். தற்போது ரசிகர்கள் மத்தியில் இவ்விரண்டு துறைகளும் பெற்றுள்ள அபார வளர்ச்சியை நினைத்து பிரமிப்பாக இருக்கிறது.

Related Stories: