பா.ரஞ்சித் படத்துக்கு சென்சாரில் சிக்கலா?

சென்னை: பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு சென்சாரில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இந்த மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படம் சென்சார் சான்றிதழுக்காக சென்றது. படத்தில் ஆணவக் கொலை பற்றியும் குறிப்பிட்ட சாதி பற்றியும் காட்சிகள், வசனங்கள் இடம்பெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள், வசனங்களுக்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். இதையடுத்து சென்சார் சான்றிதழ் தரவும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தை மும்பையிலுள்ள சென்சார் மறு ஆய்வுக் குழுவுக்கு கொண்டு சென்றிருக்கிறாராம் பா.ரஞ்சித். ‘படத்தில் சர்ச்சைக்குரிய கருத்து எதுவும் இல்லை. நிஜ சம்பவங்களின் தொகுப்பாகவே படம் உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல கருத்தை சொல்லும் படமாக இது அமைந்துள்ளது’ என நட்சத்திரம் நகர்கிறது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: