சந்தானத்தை இயக்கும் சங்கரின் உதவியாளர்...!

நடிகர் சந்தானம் காமெடி நடிகராக நடித்து வந்தநிலையில், கதாநாயகனாக களமிறங்கி பல படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் நடிப்பில் கடைசியாக குளுகுளு திரைப்படம் திரைக்கு வந்தது.

இதனைதொடர்ந்து இயக்குனர் சங்கருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த,  கோவர்தன் சமீபத்தில் சந்தானத்தை சந்தித்து ஒரு கதை சொல்லியுள்ளார்.  முழுக்க முழுக்க காமெடி கதை என்பதால் அது சந்தானத்துக்கு மிகவும் பிடித்துள்ளது.  இதில் சந்தானம் பல வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம்  தயாரிக்கவுள்ளது.  முதற்கட்ட பணிகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் படபிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: