கவர்ச்சி பாட்டுக்கு டபுள் சம்பளம்

புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிறங்கடித்தார் சமந்தா. இதையடுத்து இப்போது அதேபோன்று ஒரு பாடலுக்கு ஆச்சார்யா படத்தில் ரெஜினா ஆடியுள்ளார். சிரஞ்சீவி, ராம்சரண் நடித்துள்ள இந்த படமும் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக உள்ளது. தமன்னாவும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது முறையாக சமந்தா மீண்டும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆட இருக்கிறாராம்.

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிக்கும் படம் லிகர். இந்த படமும் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. புரி ஜெகன்னாத் இயக்கி வருகிறார். இந்த படத்தில்தான் ஒரு பாட்டுக்கு ஆட சமந்தாவிடம் பேசியுள்ளனர். ஊ சொல்றியா மாமா பாடலுக்கு வாங்கிய சம்பளத்தை விட டபுள் மடங்கு இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சமந்தா கேட்கிறாராம். இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை சமந்தா தேர்வாகாவிட்டால் பாலிவுட் நடிகை ஒருவரை வைத்து இந்த பாடலை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

Related Stories: