விக்ரம், துருவ் நடித்த மகான் ஓடிடியில் வெளியாகிறது

சென்னை: விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் படம், பிப்ரவரி 10ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் படங்களுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் மகான். இதில் விக்ரம், அவரது மகன் துருவ், வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் அமேசான் பிரைமில் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகிறது. தந்தை மகனுக்கு இடையிலான பாசப் போராட்டமும் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் பழிவாங்கலும் நிறைந்த ஆக்‌ஷன் திரில்லராக மகான் படம் உருவாகியுள்ளது. இது ஒரே சமயத்தில் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சென்றடைவது மகிழ்ச்சியான விஷயம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: