எ கொயட் பிளேஸ் 2 - விமர்சனம்

பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜான் கிராசின்ஸ்கி இயக்கத்தில் எமிலி பிளன்ட், சிலியன் மர்பி, மில்லிசென்ட் சைமண்ட்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ’எ கொயட் பிளேஸ் 2’  முதல் பாகத்தில் ஏலியன்கள் வந்து உலகையே அழித்திருக்கத் தப்பிப் பிழைத்த ஓரிரண்டு குடும்பங்கள் மட்டும் தங்களை போதுமான அளவிற்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திவருவார்கள். அதில் நடக்கும் போராட்டம், எஞ்சிய குடும்பம் என அடுத்த பாகம் ஆரம்பமாகிறது.

'எ கொயட் பிளேஸ் 2, ஊசி விழும் சத்தம் கேட்டால் கூட நொடிப்பொழிதில் வந்து ஆளையே அடித்துச் சாப்பிடும் வேற்று உலக ஏலியன்கள். ஏலியனிடமிருந்து தப்பிக்கும் போரட்டத்தில் அப்பாவை இழந்த குடும்பம் மீண்டும் வாழ வழி தேடி அலைந்து தங்களைப் போலவே தப்பிப் பிழைத்து வாழ்ந்து வரும் எம்மெட்டை(சிலியன் மர்பி) அடைகிறது. கண் தெரியாது. சத்தம் கேட்டால் அங்கு வந்து மனிதர்களை தாக்கும். இந்த ஏலியன்களிடம் இருந்து தனது குழந்தைகளையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள நாயகி எவ்லின் அப்பாட் (எமிலி பிளன்ட்) வழி தேட, காது கேளாத மகள் ரேகன் அப்பாட் (மில்லிசென்ட் சைமண்ட்ஸ்)மக்கள் வசிக்கும் தீவு ஒன்றை ரேடியோ மூலம் கண்டறிகிறார். அங்கே செல்ல வேண்டும் என யோசிக்க அதனால் ஏற்படும் விளைவுகளும்,சாகசங்களும்தான் மீதி கதை.

இந்த பாகத்தின் நாயகி மில்லி சைமண்ட்ஸ்தான் , காது கேளாத டீன் கண்மணி வேற லெவல் காட்டுகிறார். பயம், உடன் துணிச்சல் அதீத நம்பிக்கை என மில்லிசென்ட் மாஸ்.எமிலி பிளன்ட் கணவன் இல்லாமல் மூன்று குழந்தைகள் அவர்களின் பாதுகாப்பு, அதற்கான ஓட்டம் என சிறப்பான நடிப்பு. போலி மோர்கனின் ஒளிப்பதிவும், மார்கோ பெல்ட்ராமியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. இயக்குநர் ஜான் கிரான்ஸ்கியின் சத்தமில்லா திரைக்கதையும், திக் மொமென்ட்களுமாக கொடுத்து நம் இதயத்தின் சத்தத்தை அதிகரித்து சீட்டு நுனிக்கு வரவழைக்கிறார்.

எனினும் முந்தைய பாகம் கொடுத்த அந்த திக் திக் மொமெண்ட்கள் இதில் சற்றே குறைவு. படத்தின் நீளமும் மிகக் குறைவு என்பதால் சட்டென முடிந்து விடுகிறது. மொத்ததில் சமீபத்திய பாகங்களின் வருகையில் ‘எ குயட் பிளேஸ் 2 ‘ நிச்சயம் நம்மை ஏமாற்றாமல் சைலன்டாக தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது.

Related Stories: