நயன்தாரா படத்திலிருந்து சமந்தா விலகல்

நயன்தாரா நடிக்கும் தமிழ் படத்திலிருந்து சமந்தா விலகியுள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். முக்கோண காதல் கதையாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க இருந்தது.

இந்நிலையில் படத்திலிருந்து சமந்தா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் இயக்குனரான விக்‌னேஷ் சிவனை சந்தித்த சமந்தா, பர்சனல் விஷயங்கள் காரணமாக இந்த படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என கூறினாராம். இதையடுத்து சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் பரவியது. இதை அவரது தரப்பு மறுத்துள்ளது. அதே சமயம், படத்தில் சமந்தாவை விட நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் அவர் விலகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காத சமந்தா, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories: