53 வயதில் எம்.ஏ படிக்கும் நடிகை

பிரபல தெலுங்கு குணசித்ர நடிகை ஹேமா. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஈரமான ரோஜாவே, சத்யம், சாகசம், தேவி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஹேமா தெலுங்கு நடிகர்கள் சங்கத் துணை தலைவராகவும் இருக்கிறார். அரசியலில் நுழைந்து ஜேஎஸ்பி கட்சியிலும் பணியாற்றி வருகிறார். மண்டபேட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

53 வயதாகும் ஹேமாவுக்கு திடீரென படிக்கும் ஆசை வந்துள்ளது. ஐதரபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திறந்தவெளி பல்லைகழகத்தில் எம்.ஏ.படிக்க விண்ணப்பித்திருந்தார். இதற்கான நுழைவுத் தேர்வை நலகொண்ட அரசு கல்லூரியில் நேற்று எழுதினார். ‘சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிக்க நேரம் இல்லை. என்றாலும் படிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் அமைந்திருக்கிறது. அதனால் படிக்க முடிவு செய்தேன்’ என்கிறார் ஹேமா.

Related Stories: