மணிரத்னம் வெப்சீரிஸில் பார்வதி

மணிரத்னம் தயாரிக்க உள்ள வெப்சீரிஸ், நவரசா. இது 9 தனித்தனி கதைகள் கொண்ட ஒரு தொடர். 9 தொடரையும் 9 இயக்குனர்கள் இயக்குகிறார்கள். ஒரு தொடரை மணிரத்னம் இயக்குகிறார். கவுதம் மேனன், கே.வி.ஆனந்த், கார்த்திக் நரேன், பிஜய் நம்பியார், பொன்ராம், நடிகர்கள் அரவிந்த் சாமி, சித்தார்த் மற்றும் ரதின்திரன் பிரசாத் ஆகியோர் மற்ற தொடர்களை இயக்குவார்கள். இதில் ஒரு தொடரில் மரியான், பூ படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி நடிக்க உள்ளார். அவருடன் சித்தார்த்தும் நடிக்கிறார். மற்றொரு தொடரில் சூர்யா நடிக்கிறார். சினேகா, ஜெய், துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Related Stories: