அமெரிக்காவை போல் இந்தியாவிலும் நிறவெறி தமிழர்களை கருப்பர்கள் என ஒதுக்குகிறார்கள்: மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணம், அமெரிக்கா முழுவதும் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:  எனக்கு 14 வயதாக இருந்தபோது, டீ குடித்தால் தோல் நிறம் கருப்பாகி விடும் என்று சொல்லப்பட்டது. எனது தோழியின் தாய், என்னை சுட்டிக்காட்டி இவளைப் போல் கருப்பாகிவிடுவாய் டீ குடிக்காதே என தோழியை கண்டித்தார். அது எனக்கு அவமானமாக இருந்தது. கருப்பு நிறமுள்ள ஒருவரை ‘காலா’’ (கருப்பானவன்) என்று அழைப்பது நாம் அன்றாடம் பார்க்கும் விஷயம். தென்னிந்தியர்கள் என்றாலே கருப்பானவர்கள் என்ற கண்ணோட்டம் வடஇந்தியர்களிடம் உள்ளது. கருப்பானவர்களை பார்த்தால் ‘மதராசி’’ என்று ஏளனமாக அழைக்கிறார்கள். அதேபோல உலகளவில் அனைத்து கறுப்பின மக்களையும், சாதாரணமாக ‘நீக்ரோஸ்’’ என்று குறிப்பிடுகிறார்கள்.

Related Stories: