அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் சில திருத்தங்களுடன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர், உமாபதி. இவர் நடிகரும், இயக்குனருமான தம்பி ராமய்யாவின் மகன். தற்போது சிறுத்தை என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். இவரும், இதில் ஹீரோயினாக நடிக்கும் யாஷிகா ஆனந்தும் காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து தம்பி ராமய்யா கூறியதாவது: ஏற்கனவே மணியார் குடும்பம் படத்தில் ஒரு பாடலுக்கு யாஷிகா ஆடியிருந்தார்.