காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தாலும், ‘ஏன், நான் நல்லாயிருக்கறது பிடிக்கலையா?’ என்று தட்டிக் கழித்து நகைச்சுவை வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்த படமாக சூரி படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.