சிசிடிவி, இட்லி சாப்பிட்ட விவகாரம் சென்சாரை தாண்டி வந்தது எப்படி? திரிஷா விழாவில் இயக்குனர் பரபரப்பு

திரிஷா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. திருஞானம் இயக்குகிறார். இப்படத்திற்கான ப்ரி புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் திரையுலக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறும்போது,’ இப்படத்தின் தலைப்பு ‘பரமபதம் விளையாட்டு’ அருமையான தலைப்பு.

இத்தனை காலம் அதை மற்றவர்கள் உபயோகப்படுத்தாமல் தவறவிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால், பரமபதம் என்ற வார்த்தை வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. அந்த தலைப்பை வைத்த இயக்குநர் திருஞானத்திற்கு பாராட்டுக்கள். டிரெய்லரைப் பார்க்கும்போது படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதற்காக யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை’ என்றார். மறைந்த முதல்வர் ெஜயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் இட்லி சாப்பிட்டார்.

மருத்துவமனையில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை போன்ற விவகாரங்கள் அடிபட்டது. அதை குறிப்பிடுவதுபோல் வசனங்கள் இருப்பதாக பாக்யராஜ் சுட்டிக்காட்டிய போது அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் கே.ராஜன், டி.சிவா, எச்.முரளி, சுரேஷ் காமாட்சி, கவிஞர் சொற்கோ, பேபி மானஸ்வி, இசை அமைப்பாளர் அம்ரீஷ், புதுமுகம் விஜய் வர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: