சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன்

கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன் திலிப்குமார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்துக்கு டாக்டர் என தலைப்பிட்டுள்ளனர். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக நடிக்க பிரியங்கா தேர்வாகியுள்ளார்.

இவர் தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். விநய், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். மருத்துவ துறையை சுற்றி நடக்கும் இந்த கதையில் ஆக்‌ஷனுடன் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் என பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Stories: