நிர்வாணமாக நடிக்க கண்டிஷன் இருக்கு; ராதிகா ஆப்தே தடாலடி

கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி போன்ற படங்களில் நடித்திருப் பவர் ராதிகா ஆப்தே. இந்தி, ஆங்கில படங்கள், வெப் சீரிஸிலும் நடிக்கிறார். தமிழை பொறுத்தவரை குடும்பபாங்கான இமேஜை ராதிகா ஆப்தே கடைபிடித்து வருகிறார். ஆனால் இந்தி, ஆங்கில படங்கள், வெப் சீரிஸிலும் அதற்கு நேர் மாறாக நடித்து வருகிறார். பாதல்புர், அஹல்யா, லஸ்ட் ஸ்டோரிஸ், வெட்டிங் கெஸ்ட் போன்ற இந்தி, ஆங்கில படம் மற்றும் வெப் சீரிஸில் நிர்வாணமாகவும், டாப்லெஸ் ஆகவும், படுக்கை அறை காட்சியிலும் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

அவரது இந்த துணிச்சலை கண்ட சில இயக்குனர்கள் தங்களது படங்களில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்து கதை சொல்லச் சென்றனர். பலாத்காரத்துக்குள்ளான பெண் ஒருத்தி வில்லன்களை பழிவாங்குவது, விபசாரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கதை சொல்லி கால்ஷீட் பெற முயன்றனர். அவற்றை ராதிகா ஆப்தே நிராகரித்துவிட்டார்.

இதுபற்றி ராதிகா ஆப்தே கூறும்போது,’ வெட்டிங் கெஸ்ட் படத்தில் நான் நிர்வாணமாக நடித்ததை பார்த்துவிட்டு ஒரு சிலர் என்னிடம் விபசாரி வேடத்தில் நடிக்க வேண்டும், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.

ஸ்கிரிப்ட்டில் அதற்கான எந்தவொரு நியாயமும் சொல்லப்படாமல் நடிக்க கேட்டதால் அவற்றை ஏற்க மறுத்துவிட் டேன். வெட்டிங் கெஸ்ட் படம் சர்வதேச பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதில் நிர்வாண காட்சியில் நடிப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்த காட்சி தவிர படத்தில் நிறைய அழகான காட்சிகள் இருந்தன. எந்த காரணமும் இல்லாமல் நெருக்கமான காட்சிகளில் எப்படி நடிக்க முடியும்’ என்றார்.

Related Stories: