தமிழ்நாட்டு மேடையில் பேசவே பயமாக இருக்கிறது - மம்மூட்டி

மலையாளத்தில் உருவான சரித்திர படம், மாமாங்கம். மம்மூட்டி, உன்னி முகுந்தன், பிராச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா நடித்துள்ளனர். எம்.பத்மகுமார் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகும் இப்படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனத்தை இயக்குனர் ராம் எழுதியுள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் மம்மூட்டி பேசியதாவது:

தமிழ்நாட்டில் மேடையில் பேசுவதற்கே ரொம்ப பயமாக இருக்கிறது. படங்களின் டப்பிங்கில் எப்படியோ சமாளித்து பேசிவிடுகிறேன். மேடையில் பேசும்போது தான் தடுமாறுகிறது. மாமாங்கம் ஒரு சரித்திர படம். இதுபோன்ற படங்களில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.

காரணம், வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதுதான். ஒருவகையில் மாமாங்கம் படம் தமிழ் படம்தான். பழங்கால மலையாளத்தில் நிறைய தமிழ் சொற்கள் கலந்திருக்கும். அதை அப்படியே பயன்படுத்தி இருக்கிறோம். என்றாலும் ழ, ற், ர் ஆகிய எழுத்துகளை உச்சரிக்க சிரமப்பட்டேன். அப்போது ராம் உதவினார்.

Related Stories: