மலைமீது வாழ்பவர்களுக்கு கழுதை போக்குவரத்து

மலைமீது வாழும் மக்களுக்கு கழுதைமேல் பொருட்களை ஏற்றி செல்லும் புதியபடமாக உருவாகிறது, திருமாயி. இதன் கதை. பாடல் எழுதி புதுமுக இயக்குனராக அறிமுகமாகிறார் சாலோமோன் கண்ணன். படம்பற்றி இயக்குனர் கூறியதாவது: மலையடிவாரத்திலிருந்து மலைமேல் வாழும் மக்களுக்கான பொருட்களை கழுதை மேல் ஏற்றி பாட்டுபாடியபடி கொண்டு சென்று கொடுக்கும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் நாயன், நாயகி.

முற்றிலும் மாறுபட்ட பாணியிலான காதல் கதையாக சொல்லப்படுவதுடன், நகைக்சுவைக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ராம்சந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். அன்ஷிதா ஹீரோயின். வில்லனாக கே.எஸ்.மாசாணமுத்து நடிக்கிறார். இவர்களுடன் ராணி, பரவை சுந்தராம்பாள், நம்பியார் ராஜா, முத்துக்காளை, நெல்லை சிவா நடிக்கின்றனர்.

கேஎஸ்.மாசாணமுத்து, திருப்பூர் சிவகுமார், சோசன் சஞ்சய், அன்னஞ்சி கார்த்தி தயாரிக்கின்றனர். குமரன்.ஜி ஒளிப்பதிவு. இசை வாணன், எஸ்.பி.பூபதி இசை அமைக்கின்றனர். தேனி, அல்லிநகரம், கும்பக்கரை, பூதிபுரம், காமக் காபட்டி, சின்னமனூர், வருசநாடு, வடுகப்பட்டி, அன்னஞ்சி, கொடைக்கானல், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Related Stories: