வெப் சீரிஸுக்கு ஹன்சிகாவும் மாறினார்

பல நடிகைகள் வெப் சீரிஸில் நடித்து வரும் நிலையில் நடிகை ஹன்சிகாவும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு வந்த ஹன்சிகாவுக்கு திடீரென்று திரையுலகில் வேகத்தில் தடை ஏற்பட்டது. அடிக்கடி திரையில் பார்த்து வந்த ஹன்சிகா முகத்தை எப்போதாவது பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது தமிழில் மகா, பார்ட்னர் மற்றும் தெலுங்கு உள்பட சுமார் அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

இவ்வற்றின் படப்பிடிப்பு இடைவெளிவிட்டு நடிப்பதால் வீட்டில் முடங்க வேண்டியிருந்தது. இதையடுத்து வெப் சீரிஸ் பக்கம் கவனத் தை திருப்பி இருப்பதுடன், முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண் டிருக்கிறார் ஹன்சிகா. அனுஷ்கா நடித்த பாக்மதி படத்தை இயக்கிய ஜி.அசோக் இயக்குகிறார்.

இதுபற்றி உறுதி செய்த ஹன்சிகா, ‘இன்னும் 4 நாள் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. மற்றபடி வெப் சீரிஸ் ஷூட்டிங் முடிந்துவிட்டது. முதன்முறையாக வெப் சீரிஸில் நடித்திருப்பதால் அதை எப்படி ஏற்கப்போகிறார்களோ என்ற பதற்றம் அதிகரித்திருக்கிறது’ என்றார். இந்நிலையில் ஹன்சிகா தெலுங்கில் நடித்திருக்கும் தெனாலி ராமகிருஷ்ண பிஏபிஎல் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

Related Stories: