ரஷ்யாவில் பறக்கும் அக்னி சிறகுகள்

விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடிக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. இதன் நாயகிகள் ஷாலினி ஃபாண்டே, அக்‌ஷராஹாசன். முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், சென்ட்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படக்குழு ரஷ்யாவுக்கு பறந்துள்ளது. பயண பரபரப்பில் இருந்த இயக்குநர் நவீன் நம்மிடம் பேசினார்.

‘‘ரஷ்யாவில் படத்தின் முக்கியமான பகுதிகளையும்,  படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகளையும் படமாக்க உள்ளோம். கடந்த மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டியது. அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி தங்களது மற்ற படங்களில் பிஸியாக இருந்தார்கள். மேலும் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் படத்திற்கான தகுந்த லொகேஷன்களை நாங்கள் தேடினோம். எங்களது படத்திற்கான மிகச்சிறந்த லொகேஷன்கள் இங்கு கிடைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் எங்கள் படக்குழுவிற்கு இவ்வளவு காலத்தையும் கடந்து ஆதரவு தந்ததற்கு தயாரிப்பாளர் டி.சிவா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் தந்த ஊக்கமும் ஆதரவும் தான் இந்தப் படம் இந்த அளவு தரமாக உருவாவதற்குக் காரணம்.  முதல் கட்டப்படப்பிடிப்பு கொல்கத்தாவில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தின் தகவல்கள் எப்படி ஆச்சர்யத்தை தருகிறதோ அதே ஆச்சர்யம் படம் பார்க்கும்போதும் இருக்கும்’’ என்றார்.

Related Stories: