அந்த நினைப்பு வந்தால்தான் திருமணம்; டாப்ஸி முடிவு

இயக்குனர்களை தாக்கி பேசினார், ரசிகருக்கு பதிலடி தந்தார் என்று அவ்வப்போது டாப்ஸி பற்றிய தகவல்கள் வந்தாலும் அவரைப் பற்றி பெரிதாக கிசுகிசுக்கள் வருவதில்லை. தன்னைப் பற்றிய கிசுகிசுவை அவரே கிளப்பி விட்டிருக்கிறார். சமீபத்தில் பேட்டி அளித்த டாப்ஸி,’நான் சிங்கிள் இல்லை. எனக்கு ஒரு காதலர் இருக்கிறார். விரைவிலோ அல்லது பின்நாளிலோ அவரைத்தான் நான் மணக்க உள்ளேன்.

அவரது பெயரை இப்போதைக்கு சொல்ல மாட்டேன். எந்த துறையை சேர்ந்தவர் என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

அவரை சந்திப்பதற்கு முன் நான் நிறைய கடினங்களை சந்தித்திருக்கிறேன். நான் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேனோ அப்போது எனது திருமணம் நடக்கும்’ என்றார். தன்னைப்பற்றி டாப்ஸியே காதல் கிசுகிசுவை கிளப்பிவிட்டு, இனி ஒவ்வொரு பேட்டியின்போதும் அவரிடம் யார் அந்த காதலன் என்ற கேள்வியை கேட்க வைத்திருக்கிறார்.

Related Stories: