நடிப்பு ஆசையை தூண்டிய அழகி போட்டி; ஆஷிமா நர்வால்

கொலைகாரன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், ஆஷிமா நர்வால். அவர் கூறியதாவது: விஞ்ஞானியாக  விரும்பினேன். படித்து முடித்ததும் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு நடந்த அழகிப்  போட்டியில், ‘மிஸ் சிட்னி  ஆஸ்திரேலியா எலிகன்ட்’  பட்டம் வென்றேன். அது சினிமா ஆசையை ஏற்படுத்தியது. இந்தியாவில்  நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா  குளோபல்’ பட்டம் கிடைத்தது.

பிறகு தெலுங்கில் நாடகம், ஜெர்ஸி, தமிழில்  கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்தேன். இப்போது ராஜபீமா படத்தில் ஆரவ் ஜோடியாக டாக்டர் வேடத்தில் நடிக்கிறேன். இதில் யானையுடன் நடித்த காட்சிகள் சவாலாக இருந்தது. தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்தது. நடிப்பு  தவிர மருத்துவமனைகளுக்கும், வீடுகளுக்கும் இன்டீரியர் டெகரேஷன்  செய்திருக்கிறேன். பர்னீச்சர் பிசினஸ் செய்கிறேன். விரைவில் டூரிஸம்  சார்ந்த பிசினஸ் செய்ய இருக்கிறேன்.

Related Stories: