டோலிவுட்டில் 6 வருடத்துக்கு பிறகு சித்தார்த்

தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சித்தார்த், திடீரென தனது கவனத்தை தமிழ் சினிமா பக்கம் திருப்பினார். தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இப்போது அவரது நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் படங்கள் ரிலீசாக உள்ளன. அவள் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக இருக்கிறது.

இந்நிலையில் 6 வருடம் கழித்து தெலுங்கு படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். ரவிதேஜா, அதிதிராவ் ஹைதரி நடிக்கும் படம் மஹாசமுத்திரம். இதில் முக்கிய வேடத்தில் சித்தார்த் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கடைசியாக ஜூனியர் என்டிஆர் நடித்த பாஷா படத்தில் நடித்திருந்தார்.

Related Stories: