அவெஞ்சர்ஸ் உலக வசூலில் முதலிடம்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஹாலிவுட் படம், உலக வசூல் சாதனை புரிந்த படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த படம் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அவதார் படம் 2.7897 (ரூ.19,210 கோடி) பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து முதலிடத்தில் இருந்தது.

கடந்த 9 வருடமாக எந்த படமும் இதன் சாதனையை முறியடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் கடைசி காட்சியுடன் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் 2.7897 பில்லியன் டாலர் வசூலை கடந்தது. மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: