ஊத்தி கொடுத்தான்டி ஒரு ரவுண்டு.... மது பரிமாறிய ரகுல்

ஊத்திக்கொடுத்தான்டி ஒரு ரவுண்டு இங்கு உலகம் சுத்துதடி பல ரவுண்டு.. என்று ஒரு பழைய பாடல் உண்டு. பார்களில் பாட்டில்களை அந்தரத்தில் தூக்கிபோட்டு பிடித்தும், திடீரென்று விஸ்கியை ஊற்றி எரிய விட்டும் வித்தை காட்டி கிளாஸில் ஸ்டைலாக ஒயினையும், பிராந்தியையும் ஊற்றிக் கொடுக்கும் இளம்பெண்களையும் ஆண்களையும் பல படங்களில் பார்க்க முடியும். இப்படியெல்லாம் செய்வதற்கு படிப்பும் பயிற்சியும் தேவைப்படுகிறது.

இதுக்கு கூடவா பயிற்சி என்று கேட்பவர்களுக்கு பதில் அளித்திருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தே தே பியார் தே இந்தி படத்தில் மதுவகைகளை ஊற்றிக்கொடுக்கும் பார் பெண்ணாக நடிக்கும் ரகுல் கூறும்போது,’பாரில் மதுவகைகளை கிளாஸில் ஊற்றிக்கொடுக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. இது என்ன பிரமாதம் என்ற எண்ணியபோதுதான் அதில் உள்ள கஷ்டம் தெரிந்தது.

பார்டிரெண்டிங் என்று இதற்காக பிரத்யேக படிப்பே இருக்கிறது. அந்த பயிற்சி வகுப்பில் ஒரு வாரம் இணைந்து பயிற்சி பெற்றேன். எனக்கு வழவழப்பான கைகள். கிளாஸ்களை பிடிக்கும்போது அது வழுக்கிக் கொண்டு சென்றது. பின்னர் சுதாரித்துக் கொண்டு கிளாஸ்களை லாவகமாக பிடிக்க கற்றுக்கொண்டேன்.

பாட்டில்களை அந்தரத்தில் தூக்கிபோட்டு எப்படி சுழற்றுவது, மது வகைகளை எப்படி சரியான அளவில் கலக்குவது, எப்படி பரிமாறுவது என பல பயிற்சிகள் பெற்றேன். இதுவொரு வித்தியாசமான அனுபவம். இந்த பயிற்சியின்போது ஒருமுறை என் விரலை கூட வெட்டிக் கொண்டேன். அத்துடன் உடல் அசைவு மொழிக்கான பயிற்சியும் இருந்தது. ஆபாசமில்லாத உடல் அசைவை செய்ய வேண்டியது மிக முக்கியமாக இருந்தது’ என்றார்.

Related Stories: