போலீஸ் வேடத்தில் ஆர்.கே.சுரேஷ்

வில்லனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ், தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என்ற படத்தில் ஹீரோவாக, போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். மற்றும் வினோத் கிருஷ்ணன், சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா, அக்‌ஷிதா, ரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபு பக்கர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.அய்யப்பன். இசை, சன்னி விஸ்வநாத்.

கதை, ரிஜேஷ் பாஸ்கர். ஆர்யா ஆதி இன்டர்நேஷனல் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரிக்கிறார். மஞ்சித் திவாகர் இயக்குகிறார். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி எச்சரிக்கும் இந்தப்படத்தின் திரைக்கதை, கொச்சியில் இருந்து சென்னை வரை பயணிக்கிறது. கேரக்டர்கள் 70 சதவீதம் தமிழ், 30  சதவீதம் மலையாளத்தில் பேசுகின்றன.

Related Stories: