திருக்கார்த்திகை நெல் பொரியின் சிறப்பு

கார்த்திகை தினத்தன்று நெல் பொரியினை படைத்து வழிபடுவது வழக்கம். இந்த நெல் பெரிக்கு சில சிறப்பம்சங்கள் உள்ளன.

*செரிமானத்தை ஊக்குவிக்கும். வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும்.

*பொரியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் நோய்த் தொற்று, காய்ச்சல், ஜலதோஷம், தொண்டை புண் மற்றும் பிற சுவாசக் கோளாறு வராமல் காக்கும்.

*குறைந்த சோடியம் மட்டுமே கொண்ட பொரியை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

*இதில் உள்ள நார்ச்சத்து பசியை நீக்கி எடை குறைய உதவுகிறது. மேலும் எலும்பு, செல்கள் வளர்ச்சி அடைய உதவுகிறது.

*பொரியை உணவில் சேர்ப்பதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் வராது.

*மலச்சிக்கலை போக்கும்.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*பொரியை வங்காள மொழியில் முரி என்றும், கன்னடத்தில் கள்ளெபுரி என்றும், தெலுங்கில் மரமரலு, மராத்தியில் சிர்முரே என அழைக்கப்படுகிறது.

- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.

Related Stories: