கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாத சிறப்புக்கள்..!!

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, துளசி கல்யாணம், ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

மற்ற எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு. பொதுவாக கார்த்திகை மாதம் என்றாலே மழைக்காலம் என்பார்கள். ஆனால் இந்த கார்த்திகை மாதத்தில் தான் மழை, வெயில், பனி ஆகிய அனைத்தும் கலந்த காலநிலை நிலவும். இது சீதோஷண ரீதியாக மட்டுமல்ல ஆன்மிக ரீதியாகவும் அனைத்து தெய்வங்களின் வழிபாட்டிற்கும் உரிய மாதமாகும்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, துளசி கல்யாணம், ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எதற்காக பரணி தீபம்?

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய தீபம் பரணி தீபம் ஏற்றப்படும். இதை யம தீபம் என்றும் சொல்வார்கள். வாழ்க்கை மட்டும் அல்ல சுகமான மரணம் ஏற்பட்டு, யம யோக துன்பமின்றி இறைவனின் திருவடிகளை அடைவதற்காகவும், நமது முன்னோர்களும் யம துன்பங்களில் இருந்து விடுபட்டு, இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பதற்காகவும் ஏற்றப்படுவது தான் இந்த பரணி தீபம்.

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதம் முழுவதும் காலையிலும், மாலையிலும் வீட்டு நிலை வாசலுக்கு முன்பு விளக்கேற்றுவது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

Related Stories: