ஆன்றோர் அமுத மொழி!

“மானிடராகப் பிறந்தோரின் முதல் எதிரி முன்கோபமே! கோபம், மனிதர்களின் அறிவை அழிக்கிறது; அன்பை மறக்கச் செய்கிறது; மானிட மாண்பை மழுங்கடிக்கச் செய்கிறது!! முன்கோபச் செயல்களினால் மனிதன், இம்மை, மறுமை ஆகிய இரண்டையுமே இழக்கின்றான். முற்பிறவிகளில் செய்துள்ள புண்ணிய பலன்களும் அவனைவிட்டு விலகுகின்றன.

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஆத்ம துரோகத்தை இழக்கிறான், கோபத்தினால்! மகரிஷி ஜமதக்னி, முன்கோபத்தால் கிடைத்தற்கரிய உத்தமியான தேவி ரேணுகாவை இழந்தார். இகத்தில் சுகத்தையும், பரத்தில் நற்கதியையும் அடைய விரும்பும் மனிதன், கோபத்தைத் தவிர்க்க வேண்டும்...”

- வசிஷ்டர், துர்வாஸ மகரிஷிக்கு நைமிசாரண்ய புண்ணிய பூமியில் அருளியது.

Related Stories: