வேண்டியதை அருளும் பழண்டி அம்மன்

அருள்புரிவாயே அபிராமி தாயே சரணம்

ஆதரித்து அருள் ஆவுடை நாயகி தாயே சரணம்

கருணை புரிவாயே கற்பகாம்பினை தாயே சரணம்

காத்தருள்வாயே காமாட்சி தாயே சரணம்

பார்த்தருள்வாயே பழண்டி அம்மன் தாயே சரணம்

என்ற மேலே நாம் கூறிய  போற்றுதலுக்கு உரியவள் தான் அருள்மிகு  பழண்டி  அம்மன் ஆகும்.எல்லா உயிர்களும் மகிழ்ச்சியுடன்  வாழ்ந்து  இந்த கலியுகத்தில் அனைவருக்கும்  நல்ல தொரு வாழ்க்கையை அருள் புரிந்து  கொண்டிருக்கும் ஆதம்பாக்கம் கிராமதேவதை அருள்மிகு  பழண்டி அம்மன் ஆகும். தன்னை நாடி வரும்  பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் வரத்தை அள்ளி தருகிறாள். இவ் ஆலயத்தில் ஆடி திருவிழா, நவராத்திரி திருவிழா தை, திருவிழா..... என ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் வைகாசி மாதம் 19-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 02-06-2022 முதல் 03.06.2022 வரை 17-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவும், கருவறைக்குள் தெப்ப உற்சவமும் மற்றும் ஊஞ்சல் உற்சவத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது .இந்த நிகழ்ச்சி திருவிழாவில் 2.6.2022 வியாழக்கிழமை அன்று  காலை 9 மணி முதல் 1 மணி வரை பெரியாண்டவர் பூஜையும்.

3.6.2022 வெள்ளிக்கிழமை அன்று கலசாபிஷேகம், ஊஞ்சல் வைபவம் மற்றும் தெப்பம் நிறைவு விழா நடைபெறுகிறது.இந்த  பெரியாண்டவர் பூஜையில் கலந்துெகாள்வதால் பக்தர்களுக்கு ஏற்படும் சிறப்பு பலன்கள், என்னவென்றால் நம்மைப் பிடித்த செய்வினை, கண் திருஷ்டி, கடன் தொல்லை, நீண்டநாள் வியாதி, திருமணத்தடை நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை, வியாபார அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், சத்ரு பயம் நீங்குதல் மற்றும் பொய் வழக்குகள்/ நிலமோசடி ஆகியவற்றிலிருந்து விடுதலை போன்ற நல்ல பலன்கள் அனைத்தும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

மத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டியதையெல்லாம் அருள்பாலித்து வரும் கல்வி, தனம், தான்யம், வீரம், புகழ், புத்ர ஸந்தானம் வெற்றி என அனைத்து சக்திகளையும் ஒருங்கே அருளக்கூடிய  இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, என மூன்று சக்திகளின் உருவான இந்த அம்பிகை  அருள்மிகு பழண்டி அம்மன் ஆகும்.

இந்த ஆலயம் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் ஆகும் .இந்த ஆலயம்  பரங்கிமலை இரயில் நிலையம் அருகில்  உள்ளது.ஆன்மீக பலன் வாசகர்கள் கலந்து கொண்டு அம்மன் திருவருள் பெற வேண்டுகிறோம்..

பிரியா மோகன்

Related Stories: