ப்ருஹஸ்பதி கவசம்

வெற்றி மேல் வெற்றி தரும்  கவசங்கள்

 ப்ருஹஸ்பதி கவசம் - 15

குரு பார்க்க கோடி நன்மை என்ற வார்த்தைக்கு ஏற்ப இந்த இதழில் குரு கவசம் பற்றி நாம் இப்போது பார்க்க போகிறோம். அதிக புத்தி விசேஷம் பெற்றவரை பிரஹஸ்பதி என்றும்  சொல்லுவார்கள். குரு அல்லது பிரஹஸ்பதி சகல மந்திர வேத மார்கங்களுக்கு இருப்பிடமாகும். குருவின் பார்வை எந்த தோஷத்தையும் விலக்கும் என்று ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது. வியாழக்கிழமை இவருக்கு உகந்த நாள். இவருடைய சேத்திரம்  திருச்செந்தூர். மூர்த்தி சுப்ரமண்யர். யார் இந்த குரு பகவான்? அவருடைய செயல் பாடு  என்ன?

 ப்ருஹஸ்பதி கவசம்

ஓம் அஸ்ய ப்ருஹஸ்பதி கவச மஹாமந்த்ரஸ்ய | ஈஸ்வர ரிஷி: | அனுஷ்ட்டுப் சந்த: | ப்ருஹஸ்பதி: தேவதா | அம்பீஜம் | ம் ஸக்தி: | ம் கீலகம் | மம ப்ருஹஸ்பதி க்ரஹ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக: |

(கரன்யாஸ:) காம் அங்குஷ்டாப்யாம் நம: | கீம் தர்ஜ நீப்யாம் நம: | கூம் மத்யமாப்யாம் நம: | கைம் அநாமிகாப்யாம் நம: | கௌம் கனிஷ்ட்டிகாப்யாம் நம: | க: கரதல கரப்ருஷ்டாப்யாம் நம: |

(அங்கன்யாஸ:) காம் ஹ்ருதயாய நம: | கீம் ஸிரஸே ஸ்வாஹா | கூம் ஸிகாயை வஷட் | கைம் கவசாய ஹும் | கௌம் நேத்ரத்ரயாய வௌஷட் | க: அஸ்த்ராய பட் | பூர்புவஸ்ஸுவரோம்

இதி திக்பந்த: |

(த்யானம்)

தப்தகாஞ்சந வர்ணாபம் சதுர்புஜ ஸமன்விதம் |

தண்டாக்ஷஸூத்ர ஹஸ்தம் ச கமண்டலு வரான்விதம் ||

பீதாம்பரதரம் தேவம் பீத கந்தானுலேபனம் |

புஷ்பராகமயாபூஷம் விசித்ர மகுடோஜ்ஜ்வலம் ||

ஸ்வர்ணாஸ்வரதம் ஆரூடம் பீதத்வஜ ஸுஸோபிதம் |

மேரோ: ப்ரதக்ஷிணம் ஸம்யக் ஆசரந்தம் ஸுஸோபனம் ||

அபீஷ்டவரதம் தேவம் ஸர்வஜ்ஞம் ஸுரபூஜிதம் |

ஸர்வகாமார்த்த ஸித்யர்தம் ப்ரணமாமி குரும் ஸதா ||

(இங்கு ல-மித்யாதி மானஸ பூஜை செய்ய வேண்டும்)

ப்ருஹஸ்பதி: ஸிர: பாது லலாடம் பாது மே குரு: |

கர்ணௌ ஸுரகுரு: பாது நேத்ரே மேsபீஷ்டதாயக: ||

நாஸாம் பாது ஸுராசார்யோ ஜிஹ்வாம் மே வேதபாரக: |

முகம் மே பாது ஸர்வஜ்ஞோ புஜௌ பாது ஸுபப்த: ||

கரௌ மே வரத: பாது வக்ஷௌ மே பாது

கோஷ்பதி: |

ஸ்தனௌ மே பாது வாகீ: குக்ஷிம் மே

ஸுபலக்ஷண: ||

நாபிம் பாது ஸுநீதிஜ்ஞ: கடிம் மே பாது ஸர்வதா |

ஊரூ மே பாது புண்யாத்மா ஜங்கே மே ஞானத:ப்ரபு: ||

பாதௌ மே பாது விஸ்வாத்மா ஸர்வாங்கம் ஸர்வதா குரு: ||

(இங்கு அங்கன்யாஸம் செய்ய வேண்டும்)

ய இதம் கவசம் திவ்யம் த்ரிஸந்த்யம் ப்ரபடேன் நர: |

ஸர்வான் காமான் அவாப்நோதி ஸர்வத்ர விஜயீ பவேத் |

ஸர்வத்ர பூஜ்யோ பவதி வாக்பதேஸ்ச

ப்ரஸாதத: ||

|| இதி ப்ரஹ்ம வைவர்தபுராணே ப்ருஹஸ்பதி கவசம் ஸம்பூர்ணம் ||

பிருகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். அதனால் தான்  பிருகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.

இவர் இடம் பெயர்வதே குருப் பெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிருகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.இது ஜோதிடத்தின் படி இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம் ஆகிய இராசிகள் ஆகும். இவர் ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவராவார்.

சுப கிரகம்

நவகிரகங்களில் முழு சுப கிரகமாக விளங்குபவர் குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு உண்டான அனைத்து வகையான ஏற்றங்கள், நன்மைகளையும், செல்வங்களையும் வாரி வழங்கக் கூடியவர் என்பதால் குரு பகவானுக்கு தனிச் சிறப்பு உண்டு.ஜோதிட சாஸ்திரப்படி, சில துன்பங்களை தரக்கூடிய கிரகங்களை குரு பகவானின் பார்வை பட்டால், அவரின் துன்பங்கள் விலகி நன்மை பெருகி. நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

வியாழன் கிரகத்திலிருந்து வெளிப்படும் மஞ்சள் நிறக் கதிர், சூரிய கதிரோடு கலப்பதால் பூமியில் உயிரினங்கள் தோன்றுகின்றன.இந்த குரு கவசத்தை நாள்தோறும் அல்லது வியாழக்கிழமை நாம் படித்தோம் என்றால் குரு அருள் நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

- கவசம் தொடருவோம்

(அடுத்த இதழில் புதன் கவசம்)

அனுஷா

Related Stories: