காளியம்மன் அருள் : வாசகர்களின் ஆன்மீக அனுபவம்

நான் படித்துக் கொண்டிருக்கும்போது ஆன்மிகத்தில் மிகவும் ஆர்வத்துடன் பல ஆலயங்களுக்குச் செல்வேன். அதில் எங்களுக்குச் சொந்தமான பெண் தெய்வம் அருள்மிகு காளி என்ற காளியம்மாள் உள்ளது. திறந்தவெளியாக மண்தரையில் இருந்தது. நான் தினமும் காலை, மாலை என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதன் பக்கத்தில் அமர்ந்துகொண்டு, என் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. கூலிவேலை பார்த்துதான் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். ‘‘ஆத்தா... நான் படித்து நல்ல வேலைக்குப் போனால், உனக்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி நானே உன்னை பராமரித்து வருவேன் என உறுதிமொழி எடுத்தேன். பல ஆண்டுகள் கழித்து என் கனவில் வந்து, உனக்குக் கொடுத்த வாக்கு என்ன ஆச்சு? என்றது. நான் எனது ஜாதகம் பார்த்தேன். ஜோதிடர், ‘‘நீ கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யணும்’’ என்றார். அதற்குப் பிறகு எனக்குப் பணி நிறைவு ஆனதும், உடனே, கோயில் கட்டினேன். தற்போது கோயில் பூசாரியாகவும், தர்மகர்த்தராகவும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றோம். இக்கோயிலில், விநாயகர், முருகன், நாகம்மா, அருள்மிகு மகா காளியம்மன் தனித்தனியாக உள்ளது. கேட்ட வரம் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். செய்வினை கோளாறு நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். இக்கோயில் சிவகங்கை - இளையான்குடி வழித்தடம் பஸ் நிறுத்தம். புதுக்குளம். மனைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது.

 - S. சங்கு, பனைக்குளம்.

தாயுமானவ சுவாமியின் மகிமை

அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ என்ற சிவபுராண அருள்வரிகள் எல்லாம் வல்ல ஈசனை என்னை நாளும் வணங்கி பணிய வைக்கிறது. ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் தாயுமான ஈசரை வழிபட்டு வருவேன். எனது மனைவி கருவுற்றபோது கடைசி மாத செக்கப் செய்த போது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார். ஆனால், அன்று இரவே தாயுமான ஈசர் செட்டிபெண் வழிபாட்டு மருந்தை சாப்பிட்டு மன முருகி பிரார்த்தனை செய்தோம். என்ன கருணை ஈசனின் அருள் சொல்ல வார்த்தை. மறுநாள் சுகப் பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது. அதுவும் (அன்று திருவாதிரை நட்சத்திரம் - ஈசனின் உகந்த நட்சத்திரம்). என்றுமே எங்களை வளமுற வாழ்வித்து வாழ வைக்கும் தாயான தாயுமானவரை வணங்கி ஆனந்தமாக அருள் பேறோடு வாழ்கிறோம்.

 - ப. சரவணன் - ஸ்ரீரங்கம்.

Related Stories: