மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

சாதம்- 2 கப்(உதிர் உதிராக)

மாங்காய்- 1

தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி

பச்சைமிளகாய்- 2

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் பொடி- சிறிதளவு

தாளிக்க

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

மிளகாய்வற்றல்- 1

நிலக்கடலை- 3 தேக்கரண்டி

கறிவேப்பிலை- 1 இணுக்கு

கொத்தமல்லி- அலங்கரிக்கச் சிறிதளவு

செய்முறை:

மாங்காயின் தோலை அகற்றி துருவியோ அல்லது மிக்ஸியில் தேங்காய், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவோ செய்ய வேண்டும். தாளிதப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு அரைத்தக் கலவையை கொட்டி மஞ்சள் தூளுமிட்டு வதக்கவும். மாங்காய்க் கலவை கெட்டியானதும் இறக்கி விடவும். சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற விடவும். அரைத்து வெந்த கலவையும் ஆறின பிறகு சாதத்தில் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பை வதக்கி சாதத்தில் போட சுவையான மாங்காய் சாத பிரசாதம் தயார் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

Related Stories: