கார்த்திகை மாத விசேஷங்கள்

கார்த்திகை 1, நவம்பர் 17, ஞாயிறு -  பஞ்சமி - கிருஷ்ணபட்ச சஷ்டி. கரிநாள். முடவன் முழுக்கு, ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம். திருக்கோயிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா. விஷ்ணபதி புண்ணிய காலம்.

கார்த்திகை 2, நவம்பர் 18, திங்கள் - சஷ்டி ஷ்டி விரதம் கார்த்திகை முதல் சோமவாரம் கரிநாள். வடலூரில் மாதபூசம்.சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார்க் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

கார்த்திகை 3, நவம்பர் 19, செவ்வாய் : சப்தமி சாவித்ரி கல்பாதி திதித்வயம். திருவையாறு ஐயாறப்பர் எமதர்ம வாகனத்தில் காவேரியில் தீர்த்தம் கொடுத்தல். காலபைரவாஷ்டமி , ஆட்கொண்டார் வடைமாலைக்காட்சி. சுவாமி ஸ்ரீமுருகப்பெருமாள் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், ஸ்ரீஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

கார்த்திகை 4, நவம்பர் 20, புதன் : அஷ்டமி மஹாதேவாஷ்டமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கால பைரவாஷ்டமி.

கார்த்திகை 5, நவம்பர் 21, வியாழன் : நவமி சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

கார்த்திகை 6, நவம்பர் 22, வெள்ளி : தசமி,ஏகாதசி (திதி) அமாவாசை கிருஷ்ணபக்ஷ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸசார்த்த ஏகாதசி.

கார்த்திகை 7, நவம்பர் 23, சனி : துவாதசி கிருஷ்ணபக்ஷ வைஷ்ணவ ஏகாதசி. திருவையாறு கண்டமங்கலம் பிரம்ம ஸ்ரீ ம. சுந்தருகுருக்கள் 114வது ஜெயந்தி விழா. திருச்சானூர் பைராகிமடம் தாயார் உற்சவம் ஆரம்பம். வைஷ்ணவ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன்  கத்தவால் சமஸ்தானம் மண்டபம் எழுந்தருளல்.

கார்த்திகை 8, நவம்பர் 24, ஞாயிறு : திரயோதசி கிருஷ்ணபக்ஷ மஹாபிரதோஷம் மாத சிவராத்திரி வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல்ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம். மதுரை ஸ்ரீ இன்மையில் நன்மை தருவார் திருக்கோயில், சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் சந்நதியில், ஸ்ரீகந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு பூஜை.

கார்த்திகை 9, நவம்பர் 25, திங்கள் : சதுர்த்தசி கார்த்திகை இரண்டாவது சோமவாரம். கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.

கார்த்திகை 10, நவம்பர் 26, செவ்வாய் : அமாவாசை சர்வ அமாவாசைைய கரிநாள். ஏரல் ஸ்ரீஅருணாசல சுவாமிகள் திருவிழா. கோடிகன்னியா தானம் தாதாச்சாரியார் திருநட்சத்திரம். புஷ்கல யோகம்.

கார்த்திகை 11, நவம்பர் 27, புதன்: சுத்த பிரதமை, இஷ்டி சாந்த்ரமான மார்கசிர மாச ஆரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுரை தெற்கு வாசல் முகையதீன் ஆண்டவர் கொடியேற்றம்.

கார்த்திகை 12, நவம்பர் 28, வியாழன் : துவிதியை சென்னை பைராகிமடம் தாயார் கருடசேவை, திருச்சானூர் பத்மாவதி தாயார் கருடசேவை. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

கார்த்திகை 13, நவம்பர் 29, வெள்ளி : திருதியை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

கார்த்திகை 14, நவம்பர் 30, சனி : சதுர்த்தி சுக்லபட்ச சதுர்த்தி. திருச்சனூர் பத்மாவதி தாயார் ரதம். தேரெழுந்துதூர் ஸ்ரீஞான சம்பந்தர் புறப்பாடு, பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு செய்ய நன்று.

கார்த்திகை 15, டிசம்பர் 1, ஞாயிறு : பஞ்சமி. சென்னை பைராகிமடம் பஞ்சமி தீர்த்தம், திருவெண்காடு அகோரமூர்த்தி மகா அபிஷேகம். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் உற்சவாரம்பம். திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் பிறந்த நாள்.

கார்த்திகை 16, டிசம்பர் 2, திங்கள் : சஷ்டி சுக்லபட்ச சஷ்டி கார்த்திகை மூன்றாவது சோமவாரம். ச்ரவண விரதம். சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம். சுப்ரமண்ய சஷ்டி, சம்பா சஷ்டி. திருநெல்வேலி நெல்லையபர் கொலுதர்ப்பார் காட்சி.

கார்த்திகை 17, டிசம்பர் 3, செவ்வாய் : சப்தமி கரிநாள். திருப்பரங்குன்ம் ஸ்ரீஆண்டவர் பூத வாகனத்தில் பவனி வரும் காட்சி.

கார்த்திகை 18, டிசம்பர் 4, புதன் : அஷ்டமி திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

கார்த்திகை 19, டிசம்பர் 5, வியாழன் : நவமி ப்ரளய கல்பாதி. பிரளய கல்பாதி சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

கார்த்திகை 20, டிசம்பர் 6, வெள்ளி : தசமி (திதி) ஸ்ரீவாஞ்சியம் பானுவார உற்சவ ஆரம்பம். அஹோபிலமடம் 45ம் பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

கார்த்திகை 21, டிசம்பர் 7, சனி : தசமி. திருவண்ணாமலை அருணாசலநாயகர் மஹா ரதோற்சவவம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் யானை வாகனத்தில் திருவீதிவுலா.

கார்த்திகை 22, டிசம்பர் 8, ஞாயிறு : ஏகாதசி சுக்லபட்ச சர்வ ஏகாதசி.திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு.

கார்த்திகை 23, டிசம்பர் 9, திங்கள் : துவிதியை சுக்ல பட்ச (சோம) மஹா பிரதோஷம். பரணி தீபம் கார்த்திகை நான்காவது சோமவாரம். காஞ்சி 108 சங்காபிஷேகம். லட்ச தீபம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி.

கார்த்திகை 24, டிசம்பர் 10, செவ்வாய் : திரயோதசி அண்ணாமலையார் தீபம் பாஞ்சராத்ர தீபம், கார்த்திகை தீபம் கார்த்திகை. திருமங்கையாழ்வார் (நட்சத்திர) கணம்புல்லர். திருவண்ணாமலை தீபம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதீஸ்வர ரூபமாய் மஹா தீப ஜோதிட தரிசனம்.

கார்த்திகை 25, டிசம்பர் 11, புதன் : சதுர்த்தசி. பௌர்ணமி, சர்வாலய தீபம் வைகானஸ தீபம். தத்தாத்ரேய ஜயந்தி. சர்வ ஆலய தீபம். வைகானஸதீபம், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு.

கார்த்திகை 26, டிசம்பர் 12, வியாழன் : பௌர்ணமி இஷ்டி. பாஞ்சராத்ர தீபம், சர்ப்ப பலி உத்சர்ஜனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

கார்த்திகை 27, டிசம்பர் 13, வெள்ளி : துவிதியை. மார்கசிர பஹூள பிரதமை. ஸ்ரீ பரசுராமஜெயந்தி. திருவண்ணாமலை ஸ்ரீசுப்பிரமணியர் தெப்போற்சவம்.

 

கார்த்திகை 28, டிசம்பர் 14, சனி : திருதியை பரசுராம ஜெயந்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன் சேவை.

கார்த்திகை 29, டிசம்பர் 15, ஞாயிறு : சதுர்த்தி. கிருஷ்ணபட்ச (ஸங்கடஹர) சதுர்த்தி (நட்சத்திர) ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குப்த கங்கையில் தீர்த்தம் கொடுத்து அருளல். மகா அவதார் பாபாஜி ஜெயந்தி. திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.

கார்த்திகை 30, டிசம்பர் 16 திங்கள் : பஞ்சமி கார்த்திகை ஐந்தாவது சோமவாரம் ஷடசீதி, (திதி) . தனுர்மாத பூஜாரம்பம். சிவ ஆலயங்களில் தனுர்மாத பூஜை ஆரம்பம், அவினாசி கிருஷ்ண பஞ்சமி திதி.அவிநாசி ஸ்ரீலிங்கேஸ்வரர் கார்த்திகை தீப உற்சவக் காட்சி.

Related Stories: