சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிவகங்கை குளம் அருகே சிவகாமசுந்தரி அம்பாளுக்கான தனிகோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த சில மாதங்களாக திருப்பணி நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து இக்கோயிலில் நேற்று காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதே போன்று தெற்கு கோபுர வாயில் அருகே அருள்பாலித்து வரும் வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமாரசாமி கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் அதே நேரத்தில் நடந்தது.

இதனையொட்டி கோயிலில் கடந்த 4ம்தேதி முதல் அனுக்ஞை, பல்வேறு ஹோமங்கள், வாஸ்து சாந்தி மற்றும் 8 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு கோயில்களை அடைந்தது. பின்னர் இரு கோயில்களிலும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு அம்பாளுக்கு மகாபிஷேகமும் அதனை தொடர்ந்து சாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.

Related Stories: