ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மானாமதுரை: மானாமதுரை வைகையாற்று மேல்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம் உள்ளது. புராண காலத்தில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு சொந்தமான முக்கியமான கோயிலாகும். ஐந்தாண்டுகளுக்கு முன் தொடங்கிய கோயில் திருப்பணிகள் கடந்த மாதம் நிறைவுற்றது. கடந்த 4ம் தேதி மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பிப்.8ம் தேதி முதற்கால யாகபூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் காலை விசேஷ ஸந்தி, நான்காம் கால யாகபூஜை, ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, ஆறாம் கால யாக பூஜைகளுக்கு பின் கடம் புறப்பாடாகி காலை 9.40 மணிக்கு கோயில் கோபுரங்களில் சிவாச்சாரியர்கள் புனிதநீரை கும்பத்தில் ஊற்றினர். தொடர்ந்து அன்னதானம், மாலை 4 மணிக்கு மகா அபிஷகம் 6 மணிக்கும் இரவு திருக்கல்யாணம், இரவு 8.30 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. கும்பாபிஷேக பணிகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி சாரிடபிள் டிரஸ்ட்டி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் நடராஜன், ஏ.ஆர்.பி.முருகேசன், ராமையாநாடார், நாகராஜன் மற்றும் விழாக்குழுவினர், தேவஸ்தான அதிகாரிகள் செய்திருந்தனர்.

விழாவில் சீனியப்பா அன்கோ சுப்பிரமணியன், சுப்பிரமணியன் அன்கோ ஜான்தினகரன், சீனியப்பா டிம்பர் டிரேடிங் நடராஜன், சுதா ஏஜென்சிஸ் சுரேஷ், வணங்காமுடி சேம்பர் உரிமையாளர்கள் திவான்ராஜ், வணங்காமுடி, ஆனந்தகிருஷ்ணன் அன்கோ குணசீலன், சீனியப்பா லாட்ஜ் ஆனந்தகிருஷ்ணன், அருணாட்சி அம்மன் சேம்பர்ஸ் நாகராஜன், ஏஎல்எல்ஸ் ராமையாநாடார் அன் சன்ஸ் ராஜேந்திரன், டியுகோ செராமிக்ஸ் உரிமையாளர்கள் துரைசாமி, கோட்டையன், அபிநயா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நமச்சிவாயம், கணேஷ் டிரேடிங் கம்பெனி கோவிந்தன், அகிலா டிம்பர்ஸ் லெட்சுமணன், ஜோதிடர் மகாதேவன், கண்ணுச்சாமி மளிகை சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: