திருச்செந்தூர் மாசித் திருவிழா : சுவாமி, அம்பாள் கேடய சப்பரத்தில் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவில் 2ம் நாளான நேற்று சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் வீதியுலா வந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 2ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.

காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்கக்கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி தூண்டிகை விநாயகர் கோயிலுக்கு பின்புறமுள்ள ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்னர் அம்பாள் மட்டும் உள் மாடவீதி, வெளி ரதவீதிகளில் உலா வந்து மீண்டும் மண்டபம் வந்து சேர்ந்தது. மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து சிவன் கோயில் சேர்ந்தனர். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: