முந்திரி அப்பம்

என்னென்ன தேவை?

 

அரிசி - 1 கப்,

முந்திரிப்பருப்பு - 1/4 கப்,

சர்க்கரை - 11/4 கப்,

துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,

பால் - 1/4 கப்

பொரிக்க - (நெய், எண்ணெய்)  தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

 

மாவிற்கு: அரிசியை 11/2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். சர்க்கரை, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் அனைத்தையும் பால் சேர்த்து நைசாக அரைக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து மேலும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது குளிர்ந்த பாலை சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை கரைத்து கொள்ளவும்.

 

அப்பம் தயாரிக்க:

கடாயில் எண்ணெயை காயவைத்து, சிறு குழியான கரண்டியை பயன்படுத்தி, எண்ணெயின் நடுவில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். அப்பம் மேலே வரும்போது லேசாக திருப்பி விடவும். வெந்ததும் எண்ணெயிலிருந்து எடுத்து அதிகப்படியான எண்ணெயை வடித்து, சூடாகவோ ஆறவைத்தோ பரிமாறவும். ஒவ்வொரு அப்பமாகப் பொரித்தெடுக்கவும். மெத்தென்று இருக்கும் போதே எடுத்து விடவும். கரகரப்பாக விட வேண்டாம்.

Related Stories: