முத்தாலம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு வத்திராயிருப்பில் இன்று தேரோட்டம்

வத்திராயிருப்பு: முத்தாலம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, வத்திராயிருப்பில் இன்று தேரோட்டம் நடக்கிறது. வத்திராயிருப்பில் முத்தாலம்மன் பொங்கல் கலைவிழா மற்றும் தேரோட்டம் கடந்த 2ம் தேதி மதுப்பொங்கலுடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு மேல் முத்தாலம்மன் கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு நேரத்தில் முத்தாலம்மன் தேரில் அமர்ந்து பவனி வந்தார்.

இன்று மதியம் வரை முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறும். பக்தர்கள் மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர். பின்னர் தேரில் இருந்து முத்தாலம்மன் கோயிலில் சாமி இறக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் முத்தாலம்மன் பிரியா விடை நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரராசு முத்தாலம்மன் பக்தசபா தலைவர் சுந்தரராஜ பெருமாள், செயலாளர் விவேகானந்தன், பக்தசபா மூத்த உறுப்பினர் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஹரிகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: