வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் நேற்றுமுன்தினம் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு காலை கோபால வினாயகர், பெரியாழி, அங்காளம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை அங்காளம்மன் சரஸ்வதி அலங்காரத்தில்  பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வீதிஉலா வந்தார். தொடர்ந்து, இரவு ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். முன்னதாக தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலைமுடி காணிக்கை, ஆடு, கோழி பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு வாணவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: