பேரெழிலும் துடிப்பும் கொண்ட கருவாழைக்கரை காமாட்சி

கருவாழைக்கரை என்ற சிற்றூரில் காஞ்சி காமகோடி பீடாதிபதியான மகாபெரியவர் இத்தலத்திற்கு வந்தபோது இந்த மாரியம்மனே காமாட்சியாக காட்சி கொடுத்தாளாம். அது முதல் இவளை காமாட்சி என்றே அழைக்கிறார்கள். பேரெழிலும் துடிப்பும் பொங்கும் அருளும் கொண்ட அன்புருவான அன்னை.  பல வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இவளே குல தெய்வமாக விளங்குகிறாள். பிரதி தினம் மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நிகழ்த்துகின்றனர். யார் வந்தாலும் இந்நேரத்தில் மாற்றம் இல்லை. குறிசொல்லும் வழக்கம் இங்கு உள்ளது.

இவளை ஆராதிக்கும் குடும்பங்கள் பல. சற்றே சிறிது தொலைவில் காவிரி அமைதியாக சிறு வாய்க்கால் போல கடலாடச் செல்கிறாள். பெரும்பாலும் பிரார்த்தித்துக் கொண்டு பக்தி சிரத்தையுடன் காவிரி தீர்த்தத்தாலேயே அபிஷேகம் செய்விக்கிறேன் என்று வேண்டிக் கொண்டு நிறைவேற்றுகிறார்கள். மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் கருவாழைக்கரை காமாட்சி தலம் உள்ளது.

Related Stories: