ஜெயிலர் 2வது பாடல் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் 2வது பாடல் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் 4வது முறையாக ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதனால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனிருத் இசையில் உருவான ‘வா நூ காவாலய்யா’ என்று தொடங்கும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல், கடந்த 6ம் தேதி வெளியானது. ரஜினிகாந்த், தமன்னா இணைந்து நடித்த இப்பாடல் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், 2வது பாடலான ‘ஹுக்கும்… டைகர் கா ஹுக்கும்’ என்ற பாடல், 17ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதை படக்குழு வீடியோ ஒன்றைப் பகிர்ந்து அறிவித்தது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் ஸ்டைலாக வசனம் பேசுவதும் துப்பாக்கியால் சுடும் காட்சியும் இடம்பெற்றது.

‘ஹேய், இங்க நான் தான் கிங். இங்க நான் வச்சது தான் ரூல்ஸ். அந்த ரூல்ஸை நான் அப்பப்போ என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அதை கப் சிப்புனு கேட்டு ஃபாலோ பண்ணனும். அத விட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ண நினைச்ச…. உன்ன கண்டம் துண்டமா வெட்டி கலைச்சி போட்டுடுவேன். ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்’. என மாஸாக பேசி துப்பாக்கியை வைத்து ரஜினிகாந்த் மிரட்டும் காட்சிகள் இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று மாலை இந்த பாடல் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து பாடல் வைரலானது.

The post ஜெயிலர் 2வது பாடல் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: