ரிலீசுக்கு தயாராகிறது துருவ நட்சத்திரம்

சென்னை: விக்ரம் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் புதிய பாடல் நாளை வெளியாகிறது. ‘துருவ நட்சத்திரம்’ படம் கடந்த 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது ரிலீசுக்கு இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே ‘துருவ நட்சத்திரம்’ குறித்த சில செய்திகள் வெளியான நிலையில் தற்போது கவுதம் மேனன் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் 2வது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். நாளை (ஜூலை 19ம் தேதி) இந்த பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் தமிழில் ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுவதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

The post ரிலீசுக்கு தயாராகிறது துருவ நட்சத்திரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: