தெலுங்கு ஹீரோவுடன் முத்தக்காட்சியில் நடித்த நந்திதா

சென்னை: சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சில கன்னட நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கும் நந்திதா ஸ்வேதா, பிறகு ஒரு கன்னடப் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தமிழில் ‘அட்ட கத்தி’ படத்தில் அறிமுகமானார். பிறகு விஜய் சேதுபதி ேஜாடியாக ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் ‘குமுதா’ என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான அவர், தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’, ‘எதிர் நீச்சல்’, ‘புலி’, ‘கலகலப்பு 2’, ‘தேவி 2’, ‘கபடதாரி’ உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு தமிழில் புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடிக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் போட்டோக்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது தெலுங்கில் ‘ஹிடிம்பா’ என்ற படத்தில் நடித்துள்ள நந்திதா ஸ்வேதா, ‘ஐ ஆம் தி பேட் கய்’ என்ற பாடல் காட்சியில் கிளாமராக ஆடி இருக்கிறார். மேலும், ஹீரோ அஸ்வின் பாபுடன் முத்தக்காட்சியிலும் நடித்துள்ளார். இதில் அவர் போலீஸ் அதிகாரி கேரக்டர் ஏற்றுள்ளார்.

The post தெலுங்கு ஹீரோவுடன் முத்தக்காட்சியில் நடித்த நந்திதா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: